Wednesday, August 22, 2012

corporate உலகம்

சுயம் மறந்து
மனிதம் இறந்து
மானியம் நோக்கும்
மானிட வெள்ளம்-
தம்மால் தகர்க்க முடியா
தன் ரத்தச் சிதறல்கைள
தலை மேல் தூக்கி
தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்
தாண்டவம் ஆடுகிறது.....
தலை மேல் தாங்க வேண்டாம்-
தகுமோ அப்பாதகச் செயல்?
தாமும் யாமும்
தாழ்ந்தோரல்ல யாருக்கு யாரும்...,
தம் மதி வழி
தடம் புறப்படும் யாம்
தம் முடி மிதி
தாங்க வழி செய்வோமோ - எனத்
தாங்கும் எம்மையும் எட்டி உதைப்பதென்ன?
விழி பிய்த்துப் பிடுங்குவெதன்ன?
உணர்வும் உளமும் உருக்கிப் பிழிவெதன்ன?
நான் மனம் உவந்து
நன் மனம் ஊற்றி
நித்தமும் உடல் உருக்கி
நெடுவளர் நின் செங்கோல்,
நீண்டெந்தன் உயிர் மாய்ப்பதென்ன?

Thursday, February 2, 2012

காதலின் நினைவுகள்

கண்கள் முன்னே யாவும் நலம்
எங்கும் மனிதர்கள்..
வாழப் பிரியப்பட்டு தான்
வழி தேடியது விழி..
விழுந்தேன் புல் மெத்தையில்
என நினைத்தேன்
விழித்தேன் முள்ளினூடே
முளைத்திருந்தேன்..
எழுந்தேன் எங்கோ இருந்தேன்
மனதால் உனைத் தேடிக்கொண்டு....
வேண்டிய அனைத்தும்
கிட்டிய வேளையில்,
வேண்டாமல் நீளும்
இடைவெளிக்கு விடை தான் தர முடியவில்லை...
முகத்தில் சிரிப்பும்
மனதில் தவிப்பும்
முகமூடி மோகம்
இல்லாமல் போகும்
நாள் எங்கே?
நானும் நீயும்
நேசித்ததை மீறி
கொண்ட யுத்தங்களே மேல்,
இங்கு நான் உழலும் தனிமையை விட.....

Friday, April 1, 2011

நானும் காதலும்.............

உருகும் பனியும்
நனையும் மலரும்
நள்ளிரவில்
நெருக்கத்தில் இருந்தென்ன இன்பம்?

என் மூச்சு வாங்கி
உன் சுவாசம் சேர்க்க
காற்றுக்கு தான்
காவல் பயணம் எத்தனை தூரம்?

வடக்கும் தெற்கும்
நான் இங்கும்
நீ அங்கும்
நிலைப்பதிலே தான்
நினைவுக்கு வருகிறது-
காற்று மீண்டு வந்து
கால தாமதமாய்
பதில் சொல்கையில்...

Sunday, March 6, 2011

ஏன் இந்தக் காதல் அவதி?

இரத்தத் தொடர்பின்றி பித்தம் தலைக்கேறும் பாசமே காதலாயின், நித்தம் வலியின்றி நாளும் இரணமின்றி வாழ்க்கையில் வசந்த்தத்தை தான் அது தாராதோ? தரும் போல் தரும் மறுகும் போல் மறுக்கும் இறுதியில் அது மிதிக்கும் என் நெஞ்சம் மரிக்கும்... நான்-- நாம் ஆகி நாளும் பொருள் பட நெஞ்சம் பட பட நித்தம் உடன் பட நின் மனதுள் தான் நான் வாழலாகாதோ? நான் பாசமும் நீ வேஷமும் ஈவது ஏனோ? இன்னும் உன்னோடு இச்சையுடன் இணைந்திருப்பதே வீண் தானோ?

Friday, November 12, 2010

குழந்தையும் தெய்வமும் வேறில்லை

பிஞ்சுப் பொன் விரல்கள்
பரிவொடு தீண்டுகையில்,
"காணாததைக் கண்டது போல்
கண்கொள்ளா காட்சிக்குள் சிறைப்படுவாய்"-
என்று அசரீரீ
ஏதும் எழக்காணோம்...

பற்கள் இல்லா பளிங்கு சிரிப்பில்
பறிகொடுத்து விட்டேன் மனத்தை...

சிரித்துக் கொஞ்சி
சிந்தனை திருடிய போதும்,

தன் தாயின் தங்கையே என்று
தாய்க்கு மட்டுமே அளித்தத் தங்க முத்தங்களை
எனக்கே எனக்காய் வரம் பொழிந்த போதும்,

என் மேல் சாய்ந்து கொண்டு
எந்தையே அழைத்தாலும்,
என் நெஞ்சொடு இணைத்துக் கொண்டு
எனை விட்டு இறங்க மறுத்த போதும்,

வேறொன்றும் வேண்டாம்
வேண்டியதெல்லாம் கிட்டியாயிற்று என
மண்டியிட்டேன் இறைவனிடம்......

இன்று...

அகவை ஒன்றாகி
அமெரிக்காவில் விடுமுறை கழித்து
தாளாத ஏக்கத்தோடு
தான் மட்டும்
திரும்பிய தாத்தவைத் தேடுகிறாள்,..

கணினி வழியே
கண்ட தாத்தாவை
"பக்கத்தில் வா" என்று அழைக்கையில்,

என்ன சொல்லிப் புரியவைப்பது
எங்கள் செல்லத்துக்கு..
எட்டா மைல்களுக்கு அப்பால்
ஏங்கிக் கொண்டிருக்கிறோம் நாங்கள் என்று...... .

Sunday, August 22, 2010

வெற்றி

வாழ்க்கைப் பாதையில்
வழிந்திடும் முட்கள்
முகப்பு முகர்ந்ததும்
ஒதுங்கிச் செல்ல ஒத்துழைக்கும்..........

முல்லை வடிவில்
முட்கள் இருந்தால்
மனத்தையும் சேர்த்தல்லவா
அவைத் தைத்துக் கிழிக்கும்...


மிச்சமுள்ள பாதை செல்ல
இரத்தம் சுவடாய் பின் வரும் மெல்ல....

குருதி காயும் காலம்
மன உறுதி தேயும் நேரம்......

ஞாயிறு மலரும் காலை தோறும்
ஞான விடியல் ஏக்கம் ஊறும்....

கைப்பிடி சிநேகத்தில்
காலூன்றி முன்னேறினேன்....

முன்னேறினேன்....

வெற்றிப் பழம்
தோல்வி விதையில்
உழைப்பு உரத்தில்
உண்டாகும் உறுதியாய்...

பழம் தேடும் பயணம் மட்டுமே
கடினம் பலருக்கு
சுலபம் சிலருக்கு..

Friday, June 18, 2010

வாழ்க்கை.......................

சிவப்பெனும் நிறம் ஒன்றே!

அதைப் புசிப்பது,
இரத்தமா ரோஜாவா என்பதே
வழிவது,
வன்முறையா வாஞ்சையா என விதி செய்யும்....

அஃதே வாழ்க்கையும்...
இயற்கையும் உழலும் உலக இயலும் ஒன்றே...

விழி வார்ப்பின்
வரைமுறைக்குள் தான்
வாழ்க்கை,
வசப்படுமா வலிதருமா என்பதும் அடங்கும்...