Saturday, May 22, 2010

ஒற்றைச் சொல் கவிதை .....

மேகம் கருக்கையில்
மழை மண் தொடுகையில்
என்னைத் தீண்டிய தென்றல்
எம்மிடம் சொன்னது,
"காதல் கனிந்தோ
அன்பைப் பொழிந்தோ
இயற்கை பதித்தோ
கவிதை எழுதாயோ?" என்று............

பச்சிலை மேல் துயில்
பனி நீர்த்துளிகள்
பட்டென்று விழி திறந்து
பதியேன் கவியை என்றன...

நிறங்கள் நிஜத்தை
நிறைத்த வண்ணம்
நிழலா நகலா
நின் வண்ணம் என்னும்
நினைப்பொடு நெகிழ்த்தும்
"நின் கவி வேண்டும்" எனும் பறவைகள் தாம் எத்துணை?

இது போதாதென்று
வாசல் சிறுவர்களின்
மழைக் குளியல் வேறு..
"வா எம்கவி பாடு"
என்று வம்புக்கிழுத்தது...

சட்டென்று சிணுங்கியது செல் பேசி...
"மகளே" என்று
பூரிப்பாய் பொங்கும்
எந்தை மொழி
ஒற்றைக் கவியாய்
ஓராயிரம் முறை
ஒலித்தது என்னுள்..............................

No comments:

Post a Comment